Movie prime

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை!!

 
leave
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவாட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை தினங்களை தவிர அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், விழாக்கள், போன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
onam
அந்த வகையில், தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம். ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திர தினத்தன்று இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையின் இறுதி நாள் இன்று நடைபெறுகிறது.
onam
இதனால், இன்று கேரள மாநிலத்தில் அரசு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடடும் விதமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவாட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.