Movie prime

அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை குறித்து மருத்துவமனை அப்டேட்!!

 
minister anbil mahesh in hospital
அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்று கொண்டிருந்தார்.
education minister
அவருக்கு அப்போது திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டார்.
hospital
இந்நிலையில், அமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்ட காரணத்தால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்றும், அவருக்கு வலி மற்றும் திரவ நிவாரணிகள் சிகிச்சைக்காக கொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவருடைய உடல்நிலை சீராக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.