Movie prime

சுற்றுலா சென்ற தாயால் பலியான குழந்தையின் உயிர்!!

 
kristel jailyn
சுற்றுலா செல்வதற்காக வீட்டில் 10 நாட்கள் தனியாக விட்டு செல்லப்பட்ட 16 மாத குழந்தை பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய சூழலில் பல வித காரணங்களால் உயிர் பலி ஏற்பட்டு வருகிறது. அதிலும் எதிர்பாராத பல சம்பவங்களில் உயிரிழப்பு ஏற்படுவது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
kristel jailyn
அந்த வகையில், ஒரு தாய் சுற்றுலா செல்வதற்காக வீட்டில் 16 மாத குழந்தையை தனியாக விட்டு சென்ற போது அந்த குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த 31 வயது க்ரிஸ்டெல் என்பவருக்கு ஜெயிலின் என்ற 16 மாத குழந்தை உள்ளது. இவர் தனது 16 மாத குழந்தையை வீட்டில் தனியாக விட்டுவிட்டு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார்.

அவர் போர்ட்டோ ரிக்கோ மற்றும் டெட்ராய்ட் பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சுற்றுலா சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது குழந்தை உயிரிழந்துள்ளதை கண்டு அவரே காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது அவர் தனது குழந்தையை 10 நாட்கள் தனியாக விட்டு சென்றதை ஒத்துக்கொண்டுள்ளார்.
baby death
இந்நிலையில், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினரிடம் அவர்கள் க்ரிஸ்டெல் இவ்வாறு குழந்தையை தனியாக விட்டுச் செல்வது இது முதல் முறை இல்லை என்றும் அவர் அடிக்கடி இவ்வாறு தான் செல்வார் என்றும் கூறியுள்ளனர். தாயின் அலட்சியத்தால் குழந்தையின் உயிர் பறிபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.