Movie prime

முகேஷ் அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி!! குவிந்த பிரபலங்கள்!!

 
ambani ganapathi festivel
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டும் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்திய திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ambani ganapathi chathurthi
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி ஆகியோரின்  ஆன்ட்டிலியா இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, அலீயா பட், இயக்குநர் அயன் முகர்ஜி, ஐஸ்வர்யா ராய், சல்மான் கான், கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா, விக்கி கௌஷல், அஜய் தேவ்கன், ரோகித் ஷெட்டி, ஷ்ரத்தா கபூர், மௌனி ராய், திஷா பதானி, அனில் கபூர், ஹேமமாலினி, அனன்யா பாண்டே, ராஷ்மிகா மந்தனா, ரேகா போன்ற பல முன்னணி நடிகர் நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.
ambani ganapathi chathurthi
மேலும், தமிழ் சினிமா பிரபலங்களான இயக்குநர் அட்லி - நடிகை ப்ரியா, விக்னேஷ் சிவன் - நயன்தாரா உள்ளிட்டவர்கள் குடும்பத்தினரோடு கலந்து கொண்டனர். தொடர்ந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் ஆகியோரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.