Movie prime

மகளிர் உரிமை தொகை புதிய அறிவிப்பு!! யாரெல்லாம் தகுதி உள்ளவர்கள்??

 
cm women money scheme
பெண்களின் நலனில், பெண்களுக்கான உரிமையில் அக்கறை கொண்ட, ஆளும் திமுக அரசு தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய தகுதி வாய்ந்த மகளிருக்கு ₹1000 உரிமைத் தொகையாக வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு நிதியமைச்சர் சட்டமன்ற பட்ஜெட் உரையின் போது அறிவித்திருந்தார்.
cm money
உலகில் பல நாடுகளில் சோதனை முறையில் 'Universal Basic Income' என்ற பெயரில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு சில சமூகப் பிரிவினரிடம் மட்டும் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவ்வாறு பரிசோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம், பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்வது, குழந்தைகளை வளர்ப்பது, முதியோர்களை கவனிப்பது என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரிக்கத்தான் ‘மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், முதியோர் ஓய்வூதியத்தால் அந்த குடும்பத்தில் உள்ள தகுதியான பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெறுவது தடைபடக் கூடாது என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
women money scheme
மேலும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதிய திட்டங்களில் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள பெண்கள், உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். வருவாய்த்துறையால் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள பெண்களும் தகுதியானவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.