Movie prime

அதிகரித்து வரும் நிபா வைரஸ் பாதிப்பு!! கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!!

 
School leave
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் கோழிக்கோட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பருவ மழை பெய்து வருகிறது.
nipah virus
அதனால் மழைக்கால நோய்களான சளி, காய்ச்சல், டெங்கு போன்ற நோய்களின் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நிபா வைரஸால் கோழிக்கோட்டில் இதுவரை 789 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
child with mask
அதனால், கோழிக்கோட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.