Movie prime

தமிழ்நாட்டில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்ப தேதி அறிவிப்பு!!

 
students
தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. பெற்றோர்களும், மாணவர்களும் தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
students
தமிழகம் முழுவதும் மொத்தம் 633 சுயநிதி கலை அறிவியல் தனியார் கல்லூரிகள் மற்றும் 163 அரசு கலை கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தனியார் கல்லூரிகளில் மே 1 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 9 ஆம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு முடிவு தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்ப விநியோகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் தங்களின் உயர்கல்வி குறித்த தேடல்கள் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 13 முதல்  ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெற்றது.  12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8.76 லட்சம் பேர் எழுதினர். ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிட தயாராக உள்ளது. இந்நிலையில் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் மே 7 ஆம் தேதி தொடங்க உள்ளது. .
college
இதையடுத்து, தற்போது  மதிப்பெண் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு, மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.  நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவை வெளியிட்டால், 12 ஆம் வகுப்பில் தங்களின் எதிர்பார்ப்புக்கு குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள், நீட் தேர்வையும் சரியாக எழுத முடியாமல், மனதளவில் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம். இதனால் மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.