பான் - ஆதார் இன்னும் இணைக்கவில்லையா?? என்ன நடக்கும்??
Mar 28, 2023, 10:37 IST

பான்-ஆதார் ஆகிய இரண்டு ஆவணங்களையும் வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், உங்கள் பான் எண் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செயலிழந்துவிடும். அதுமட்டுமின்றி, அரசாங்கத்திற்கு செலுத்தி வரும் வரிகளை கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்.

கடந்த மார்ச் 30, 2022 தேதி மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம்( CBDT) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அந்த சுற்றறிக்கையில், "PAN செயல்படாத நிலையில் வைத்திருப்பவர்கள் அரசுக்கு அதிக விகிதத்தில் வரி கட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் இணைக்காவிட்டால் பல சேவைகள் நிறுத்தப்படும். அதனால், செயல்படாத பான் எண்ணை பயன்படுத்தி உங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது. மேலும், உங்களுக்கு நிலுவையில் உள்ள வரி அறிக்கைகள் செயலாக்கப்படாது. உங்கள் செயல்படாத PAN களுக்கு நிலுவையில் உள்ள வரி தொகையை திரும்பப் பெற முடியாது.

மேலும், பான் செயலிழந்தவுடன், குறைபாடுள்ள நிதி பரிவர்த்தனை போன்ற நிலுவையில் உள்ள நிதி சார்ந்த நடவடிக்கைகளை உங்களால் முடிக்க முடியாது. நீங்க எந்த ஒரு நிதி சார்ந்த பிரச்சனைகளுக்கும் புகார் அளிக்க முடியாது. பண பரிவர்த்தனைகளை சார்ந்த சேவை உதவிகளை பெற முடியாது. மேலும், பான் கார்டு செயலிழந்தால் அதிக விகிதத்தில் வரி கட்ட வேண்டும்.