Movie prime

ஒரு நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரலாக பென்குயின்??

 
sir nills olav
ஸ்காட்லாந்து நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரலாக அந்த நாட்டின் எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் உள்ள சார் நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயின், நியமனம் செய்யப்பட்டுள்ளது. உலகின் பல பாதுகாப்பு படைகளில் நாய்களின் திறன், நுண்ணறிவு போன்றவற்றின் அடிப்படையில் அதற்கென தனிப்பட்ட பொறுப்புகள் வழங்கப்படுவது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம்.
sir nills olav
அந்த வகையில், பென்குயின் ஒன்று ஒரு நாட்டின் ராணுவ பிரிவில் இடம்பெற்று இருப்பதால் உலகின் சக்தி வாய்ந்த பென்குயினாக கருதப்படுகிறது. ஸ்காட்லாந்து நாட்டின் ராணுவ மேஜர் ஜெனரலாக அந்த நாட்டின் எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் உள்ள சார் நில்ஸ் ஓலவ் 3 என்ற ராஜா வகை பென்குயின், நியமனம் செய்யப்பட்டுள்ளது.
sir nills olav
இந்த பென்குயின் நார்வேஜியன் அரச பிரிவு படைக்கு தளபதியாக செயல்பட உள்ளது. பென்குயின் தளபதியாக பொறுப்பேற்க எடின்பர்க் விலங்கியல் பூங்காவில் வெகு விமரிசையாக நடைபெற்ற விழாவில் அந்தப் படைப் பிரிவை சேர்ந்த 150 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த பென்குயினுக்கு வனவாழ்வு பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட பிரத்தியேகமிக்க விழாவில் மிக உயரிய கௌரவம் அளிக்கப்பட்டது.