Movie prime

பீதியில் மக்கள்!! தீவிரமடைந்து வரும் டெங்கு!! 2 பெண்கள் பலி!!

 
death
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஏற்கனவே கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் மழைக்கால நோய்களும் பரவத் தொடங்கிவிட்டது. வழக்கமாக மழைக்காலங்களில் அச்சுறுத்தும் சளி, இருமல், காய்ச்சல், டெங்கு, மலேரியா என்று நோய்களால் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வருகின்றனர்.
rain
தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இந்த நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருகின்றன. டெங்கு, மலேரியா போன்ற பருவ காய்ச்சல்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குவிந்து வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி குருமாம்பேட் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 19 வயது தனியார் கல்லூரி மாணவி காயத்ரி காய்ச்சல் காரணமாக  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், ஒரு மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
fever
மேலும், தமிழ்நாட்டில் தர்மபுரி மேட்டு தெருவைச் சேர்ந்த வினோத்தின் மனைவி மீனா ரோஷினி டெங்குவால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் 8 ஆம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.