Movie prime

பீதியில் மக்கள்!! அடுத்தடுத்து 4 நாடுகளில் நிலநடுக்கம்!!

 
ritcher scale
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் 3.6 மற்றும் 4.3 ஆகிய ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. முன்னதாக நேற்று மதியம் நேபாள நாட்டில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, சீனா, மற்றும் நேபாளம் நாடுகளில் உணரப்பட்டுள்ளது.
earthquake
மேலும், இன்று அதிகாலையில் தஜிகிஸ்தான் நாட்டில் முர்கோப் பகுதியில், 6.8 ரிக்டர் அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளது.

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் 6.8, 5.0, 5.2 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மேலும், இரண்டு தினங்களுக்கு முன்பு தான் பிலிபைன்ஸ் நாட்டில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
earthquake
இவ்வாறு ஒவ்வொரு நாடாக அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால், என்னென்ன விளைவுகள் ஏற்பட உள்ளது என்றும் அடுத்து எந்த இடத்தில் நிலநடுக்கம் ஏற்படும் என்றும் உலக மக்கள் பயத்தில் உள்ளனர்.