Movie prime

இன்று முதல் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து!!

 
kodaikanal

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை போன்ற பல சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த‌ சுற்றுலா த‌ல‌ங்களையும் கண்டு ரசிப்பது வழக்கம். இந்த சுற்றுலா தலங்களில் கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகளுக்கு வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
pillar rock
இந்நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த 15 பேர் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது, பைன் மரச்சோலை அருகே சாலையோரம் வேனை நிறுத்திய போது, அவ்வழியாக வந்த மற்றொரு வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் தூத்துக்குடியில் இருந்து சுற்றுலா வந்த வேன் கவிழ்ந்து, சுப்பையா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
accident
தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்திய வேன் மீது அடுத்தடுத்து வந்த 4 வாகனங்கள் மோதி மேலும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பெண்க‌ள், குழ‌ந்தைக‌ள் உள்ளிட்ட 40 க்கும் மேற்ப‌ட்டோர் காய‌ம் அடைந்துள்ளனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 7 பேர் தேனி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தை தொடர்ந்து கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனச்சரகர் செந்தில் குமார் அறிவித்துள்ளார்.