Movie prime

இன்று முதல் புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்டம் தொடங்க உள்ளது!!

 
college
தமிழ்நாட்டு அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, தொடர்ந்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் பாகம் இன்று முதல் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 1,04,347 மாணவிகள் பயன்பெற உள்ளனர்.
M.K.Stalin
முன்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், புதுமைப் பெண் திட்டத்தின் முதல் கட்டத்தை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ₹1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
mask college
தற்போது, இன்று பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம், இந்து கல்லூரியில் நடைபெற உள்ள விழாவில் இந்த திட்டத்தின் இரண்டாம் பாகம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இதனால், மேலும் 1,04,347 மாணவிகள் பயனடைவார்கள்.