Movie prime

பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து உரையாடிய பிரதமர்!!

 
pm modi
தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மேலும், பல திட்டங்களை தொடங்கி வைத்து விட்டு நேற்று இரவு கர்நாடக மாநிலம் சென்றார்.
pm modi
இந்நிலையில், இன்று கர்நாடக மாநிலம் பந்திபூருக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் அங்கிருந்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சாலை மார்க்கமாக சென்றார். தெப்பக்காடு யானைகள் முகாமில் பாகன்களுடன் யானைகள் நின்ற பிரதமர் மோடி, யானைகளுக்கு கரும்புகளை வழங்கினார். தொடர்ந்து, யானை முகாமில் இருக்கக் கூடிய மூத்த யானை பாகன்களான, திருமாறன், தேவராஜன், குன்னன், மாறன் ஆகியோருடன் பிரதமர் உரையாடினார்.
pm modi
அதன் பின்னர், பிரதமர் மோடி பொம்மன்- பெள்ளி தம்பதியுடன் கலந்துரையாடினார். பொம்மன் - பெள்ளி தம்பதியுடன் பேசிய பிரதமர் அவர்கள் வளர்த்துவரும் யானைக் குட்டியையும் தொட்டுப் பார்த்து மகிழ்ந்தார். சுமார் ஒரு மணி நேரம் தெப்பக்காடு முகாமிலிருந்த மோடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.