அதிர்ச்சியில் பொதுமக்கள்!! பிழிந்தெடுக்கும் தக்காளியின் விலை!!
Jul 2, 2023, 08:34 IST

காய்கறிகளின் விலை அந்தந்த கால நிலைக்கு ஏற்ப ஏறி இறங்குவது வழக்கம். அதிலும், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைவாக இருந்தவாறே இருக்கும் நிலையில் திடீரென எகிறிவிடும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி பழம் கிலோ ₹5 வரை விலை குறைந்து விற்கப்பட்டது. கடந்த சில தினங்களாக தக்காளி பழங்களின் விலை கிலோ ₹100 ஐ தாண்டி அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தக்காளியின் விலை ₹100 ஐ தாண்டியுள்ளதால் பொதுமக்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஒரு நாளிற்கு 1110 டன் தக்காளி தேவைப்படும் நிலையில் இன்று 15 லாரிகளில் 380 டன் அளவில் மட்டுமே தக்காளி எடுத்து வரப்பட்டுள்ளது.

இன்று வரத்து குறைவு காரணமாக, ஒரு கிலோ தக்காளி மொத்த விலையில் ₹120 ஆகவும் சில்லறை விலையில் ₹130 ஆகவும் உள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தக்காளியின் ₹50 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இனி வரும் நாட்களில் தக்காளியின் வரத்தை பொறுத்து தான் விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.