Movie prime

பொதுமக்கள் அதிர்ச்சி!! சத்தமில்லாமல் அதிகரித்துள்ள தக்காளியின் விலை!!

 
tomato
காய்கறிகளின் விலை அந்தந்த காலநிலைக்கு ஏற்ப ஏறி இறங்குவது வழக்கம். அதிலும், தக்காளி, வெங்காயத்தின் விலை குறைவாக இருந்தவாறே இருக்கும் நிலையில் திடீரென எகிறிவிடும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தக்காளி பழம் கிலோ ₹5 ரூபாய் வரை விலை குறைந்து விற்கப்பட்டது.
tomato
தற்போது தக்காளி பழங்களின் விலை கிலோ ₹80 ரூபாய்க்கு சத்தமில்லாமல் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் சில்லறை விலையில் தக்காளி பழம் கிலோ ₹80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
tomato
சின்ன வெங்காயம் கிலோ ₹80 க்கும், பெரிய வெங்காயம் கிலோ ₹20 க்கும், கேரட் கிலோ ₹55 க்கும், கத்திரிக்காய் கிலோ ₹60 க்கு விற்கப்படுகிறது. சத்தமில்லாமல் தக்காளியின் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.