Movie prime

புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு!! பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்!!

 
pudhucherry free bus
புதுச்சேரி பட்ஜெட் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய விவாதத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி நேற்று பதிலளித்தார். அதில் புதுச்சேரி அரசு ஏற்கனவே அரசு பேருந்துகளில் ஆதிதிராவிட பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
pudhucherry cm
இந்த திட்டத்தை அனைத்து மகளிருக்கும் நீட்டிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்டு கொண்டுள்ளனர். அதனால், அனைத்து பெண்களும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி நேற்று அறிவித்துள்ளார்.
money 4
மேலும், விதவை தாய்மார்களுக்கு மாதம்தோரும் வழங்கப்படும் ₹2,000 உதவித்தொகை ₹3,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். மேலும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளார்.