1-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு!!
Aug 28, 2023, 09:52 IST

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை தேதிக்கு குறித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 12 ஆம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கும் ஜூன் மாதம் 14 ஆம் தேதி 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்த பின்னர் காலாண்டு விடுமுறைகள் அளிக்கப்படும். இதுவரை காலாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பு வரவில்லை என்று மாணவர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இன்று காலை பள்ளி கல்வித்துறை காலாண்டு விடுமுறை தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து மாணவர்களுக்கு அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய் கிழமை பள்ளிகள் திறக்கப்படும். மேலும், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.