இன்று இந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!!
Jul 4, 2023, 10:37 IST

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. மேலும், மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு, தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஜூலை 7 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, இடுக்கி மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, காசர்கோடு மற்றும் வயநாடு பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.