Movie prime

மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களில் ஏற்படும் நிலநடுக்கங்கள்!! பீதியில் உலக மக்கள்!!

 
ritcher scale
கடந்த சில நாட்களாக ஆசிய கண்டத்தில் ஒவ்வொரு இடமாக மாறி மாறி நிலநடுக்கம்  வருகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்தோனேசியா நாட்டின் வடக்கு டோபெலோ பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் துருக்கி - சிரியா நாடுகளுக்கு இடையே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு 45,000 க்கும் மேல் உயிர் பலி ஏற்பட்ட சோகத்தில் இருந்தே உலக மக்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில், அதற்கு பிறகு பல்வேறு இடங்களில் பல்வேறு ரிக்டர் அளவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
earthquake
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பிலிபைன்ஸ் நாட்டில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நேற்று அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் 3.6 மற்றும் 4.3 ஆகிய ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் நேபாள நாட்டில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியா, சீனா, மற்றும் நேபாளம் நாடுகளில் உணரப்பட்டது. மேலும், நேற்று அதிகாலையில் தஜிகிஸ்தான் நாட்டில் முர்கோப் பகுதியில், 6.8 ரிக்டர் அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
earthquake
தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் உஸ்பெகிஸ்தான், சீனா, ஆப்கானிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளில் உணரப்பட்டுள்ளது. தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் 6.8, 5.0, 5.2 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

அந்த வகையில், இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்தோனேசியா நாட்டின் வடக்கு டோபெலோ பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், உலக மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.