பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!! உற்பத்தியாளர்கள் போராட்டம்!!
Mar 17, 2023, 08:45 IST

பால்வளத் துறை அமைச்சருடன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து, பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. பால் உற்பத்தியாளர் நலச் சங்கம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரும் படி, தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. அதற்கு பிறகும் பேச்சு வார்த்தையில் ஒரு சுமூக தீர்வு எட்டாத காரணத்தால், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தினர் தமிழக கிராமங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் படிப்படியாக குறையும் என்று அறிவித்துள்ளது.

மேலும், பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பாக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, ராஜபாளையம் மாவட்டங்களில் சாலையில் மாடுகளை நிறுத்தியும், பாலை சாலையில் ஊற்றியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.