Movie prime

சோகம்!! காசாவில் நடந்த வான்வெளி தாக்குதலில் 447 குழந்தைகள் பலி!!

 
israel war
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடந்து வரும் பயங்கர போரில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் இதுவரை 447 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. கடந்த 7 ஆம் தேதி அன்று இஸ்ரேலுக்கு எதிராக காசா பகுதியில் இருந்து பெரிய அளவிலான தாக்குதல் மற்றும் படையெடுப்பு தொடங்கப்பட்டது.
israel war
அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 8 நாட்களாக தொடர்ந்து இரு நாட்டிலும் பயங்கர போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாட்டிலும் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் காசாவில் கொடூரமாக கொல்லப்பட்ட மக்கள் பற்றிய விவரத்தை ஐ.நா வெளியிட்டுள்ளது.
israel war
ஐ.நா வெளியிட்ட அறிவிப்பின்படி, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 1,417 நபர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த 1,417 நபர்களில் 447 குழந்தைகளும் மற்றும் 248 பெண்களும் உயிரிழந்ததாக ஐ.நா அறிவித்துள்ளது.