Movie prime

சோகம்!! ஆற்றில் மூழ்கி பலியான 5 கல்லூரி மாணவர்கள்!!

 
water death
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள வால்பாறை தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு தினமும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, சோலையாறு ஆறு, நல்லகாத்து ஆறு ஆகிய ஆறுகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பது வழக்கம்.
vaalparai death
இந்நிலையில், நேற்று அக்டோபர் 20 ஆம் தேதி வால்பாறைக்கு கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரியில் உள்ள 10 க்கும் அதிகமான மாணவர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள் நேற்று மதியம் சோலையாறு அருகே உள்ள நல்லகாத்து ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக, சரத்(20) என்ற மாணவர் சூழலில் சிக்கி தத்தளித்து கொண்டிருந்தார்.

அதை பார்த்த, நபில் அர்சத்(20), கிணத்துக்கடவு மணிகண்ட புரத்தைச் சேர்ந்த தனுஷ்குமார்(20), கிணத்துக்கடவு மணிகண்ட புரத்தைச் சேர்ந்த அஜய்(20) மற்றும் வினித் குமார்(23) ஆகிய மாணவர்கள் அவரை காப்பாற்ற சென்றுள்ளனர். தொடர்ந்து அங்கு எஸ்டேட்டில் பணிபுரியும் உள்ளூர் மக்களும் காப்பாற்ற சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் 5 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
hospital
அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கி பலியானவர்களின் உடல்களை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.