Movie prime

சோகம்!! கடன் தொல்லை தாங்க முடியாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை!!

 
death
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் கடன் தொல்லையோ தாங்க முடியாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் ராஜேஷ் என்ற நபர் வசித்து வருகிறார்.
thokku
இவருக்கு லக்சயா என்ற மனைவியும், யக்சிதா என்ற மகளும் உள்ளனர். மேலும், இவரது தாய் பிரேமாவும் இவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே கடன் தொல்லை அதிகமாக இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக, ராஜேஷ் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
poison
இந்நிலையில், ராஜேஷ் தூக்கிட்டும், மனைவி லக்சயா, மகள் யக்சிதா மற்றும் தாய் பிரேமா மூவரும் விஷம் அருந்தியும் தற்கொலை செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அப்பகுதி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும் தற்கொலை மேற்கொண்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.