Movie prime

சோகம்!! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்!!

 
death
வீட்டில் பழுதான மின்விளக்கை சரி செய்யும் போது மின்சாரம் தாக்கி 8 ஆம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் காமேஸ்வரம் அருகே உள்ள ஒரு வீட்டில் 8 ஆம் வகுப்பு மாணவன் கோகுல் வீட்டில் பழுதாகி உள்ள மின் விளக்கை சரி செய்துள்ளான்.
bulb
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தான் கோகுலின் தந்தை புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
poison
இந்நிலையில், மகன் மற்றும் பேரன் அடுத்தடுத்து உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்த கோகுலின் தாத்தாவும் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.