இன்று முதல் தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!!
Jul 4, 2023, 07:54 IST

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ₹100 வரை விற்கப்பட்டது, அதன் பிறகு, ₹130 வரை தக்காளியின் விலை அதிகரித்து காணப்பட்டதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

முன்னதாக கடந்த வாரம், தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால், தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம், குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார். இந்நிலையில், நேற்று தமிழக தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று கூட்டுறவு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் பின்னர், அமைச்சர் இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், தக்காளியை குறைந்த விலைக்கு விற்க தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று முதல் சென்னையில் முழுவதும் உள்ள 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பின்னர் மாநிலம் முழுவதும் மாவட்ட வாரியாக குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டு இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். அதன்படி, தமிழ்நாடு முழுவதிலும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ₹50 முதல் ₹60 வரை விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.