Movie prime

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுத்த முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின்!!

 
cm wife in samayapuram
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று தங்கத்தேர் இழுத்து நேற்றிக்கடனை நிறைவேற்றி உள்ளார். திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று. இங்கு ஆடி மாதம் என்றால் பக்தர்களின் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும்.
cm wife in samyapuram
அதிலும், ஆடி செவ்வாய், வெள்ளி கிழமைகளில் மாரியம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். அந்த கோவிலில் தங்கத்தேர் இழுக்க வேண்டுமென்றால் முறையாக பதிவு செய்ய வேண்டும். தங்கத்தேர் இழுப்பவர்கள், பணம் செலுத்தி ரசீது பெற்ற பின், சம்பந்தப்பட்டவர் பெயர், கோவிலில் உள்ள அறிவிப்பு பலகை எழுதி வைக்கப்பட்ட பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் பதிவு செய்த நபர் தேர் இழுக்க வேண்டும்.
cm wife in samayapuram
இந்நிலையில், தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று மாலை சமயபுரம் மாரியம்மனை தரிசித்துள்ளார். மேலும், அங்கு தங்கத் தேர் இழுத்து தனது நேற்றிக்கடனை நிறைவேற்றிய பின்னர், 51 சுமங்கலிகளுக்கு தாலி போன்ற மங்கள பொருட்கள் வழங்கி உள்ளார். நேற்று தங்கத்தேர் குறித்த அறிவிப்பு பலகையில் துர்கா ஸ்டாலின் பெயர் இடம் பெறவில்லை, இருப்பினும், மாலையில் அவர் தங்கத்தேர் இழுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.