கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!! ஆட்சியர்கள் அறிவிப்பு!!
Jul 6, 2023, 08:17 IST

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று ஜூலை 6 ஆம் தேதி கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

மேலும், கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்திலும் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் இன்று 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.