இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!
Updated: Oct 27, 2023, 09:05 IST

இன்று மருது பாண்டியர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொது விடுமுறை தினங்களை தவிர அந்தந்த மாவட்டங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள், மற்றும் மாபெரும் தலைவர்களின் நினைவு தினங்களை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இன்று சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களான இருவரையும் ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதன் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர், தேவகோட்டை, காளையார்கோயில், இளையான்குடி ஆகிய 7 ஒன்றியங்களில் இன்று பள்ளி, மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார்.