Movie prime

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! ஆட்சியர் உத்தரவு!!

 
School leave
தூத்துக்குடி மாவட்டத்தில் பனிமய மாதா பேராலயத்தின் 441 ஆவது திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த திருவிழா, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட தூத்துக்குடி பனிமய மாதா பேராலயம் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையானது.
panimayamatha
அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலியும் 7.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடத்தப்பட்டு  ஆலயம் எதிரே அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடிக் கம்பத்தில் திருவிழா கொடியேற்றம் நடந்தது. இந்தத் திருவிழா உலக நன்மை, உலக சமாதானம், கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைவருக்குமான விசேஷ திருப்பலிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான தங்கத்தேர் பவனி விழாவின் 10ம் நாளில் நடைபெறும்.  

கொடி கம்பம் முன் பால், பழம், பேரீச்சம்பழம் நேர்ச்சை பொருட்களாக படைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த திருவிழா குறித்து பேசிய பேராலய அதிபரும், பங்குத் தந்தையுமான குமார் ராஜா "தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம் ரோம் நகரின் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது.  தூத்துக்குடி மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த ஆண்டு தங்கத்தேர் பவனி நடைபெற உள்ளது.  
church
தங்கத்தேர் பவனி  ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடக்கிறது. திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அன்றைய தினம் விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. ஆகஸ்ட் 5ம் தேதி பனிமய மாதா தேர்பவனி  திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.