Movie prime

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! ஆட்சியர் உத்தரவு!!

 
School leave
நாளை தமிழகம் முழுவதும் ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. முருகன் ஆலயங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஆடிக் கிருத்திகை தினத்தையொட்டி, அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். பலரும் காவடி சுமந்து, திருத்தணிகை முருகனை தரிசித்து, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.
thiruchendur
இந்நிலையில், உள்ளூர் மக்களும் ஆடிக்கிருத்திகை விழாவில் கலந்து கொள்ள வசதியாகவும், வெளியூரில் இருந்து வந்து செல்கிற பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கருத்தில் கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாளை விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில்  வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முழு பணி நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
leave
ஆடி மாதம் முழுவதுமே வழிபாட்டுக்குரிய மாதம் தான் என்றாலும், ஆடியில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது ஆடி கிருத்திகை. சாதாரணமாக கார்த்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடி கிருத்திகை அன்று விரதம் இருந்தால், நமக்கு இருக்கும் தோஷங்கள் அனைத்தும் விலகிவிடும் என்பது நம்பிக்கை.