Movie prime

நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை!! ஆட்சியர் அறிவிப்பு!!

 
School leave
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடத்தப்படும். அதன்படி ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ்,  உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் முன்னிலையில் புனித கொடி ஏற்றப்பட்டது.
velankanni
ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளான 8 ஆம் தேதி அன்னையின் தேர்பவனியும் நடைபெற்றது.  இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவிற்காக  நாளை செப்டம்பர் 8 ஆம் தேதி நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
velankanni
இன்று செப்டம்பர் 7 ஆம் தேதி இரவு தேர்பவனி, 8 ஆம் தேதி மாதா பிறந்தநாள் விழா நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 23 ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.