இன்று 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!! ஆடி பெருக்கு!!
Aug 3, 2023, 09:03 IST

தமிழ்நாடு முழுவதும் இன்று ஆடி 18 ஆம் பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ஆடி பெருக்கை முன்னிட்டு ஈரோடு, தர்மபுரி, சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில், ஆடி பெருக்கு திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆடி 18 ஆம் பெருக்கு கொண்டாட்டத்தில் உள்ளூர் மக்கள் பங்கு பெறும் வகையில் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தீரன் சின்னமலை 1805 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு தினத்தன்று தூக்கிலிடப்பட்டார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன் காரணமாக, இன்று ஆகஸ்ட் 3 ஆம் தேதி தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடையெழு மன்னர்களில் ஒருவரான வல்வில் ஓரி விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவினை முன்னிட்டு, இன்று நாமக்கல் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை தினங்களை ஈடு செய்யும் வகையில், திருப்பூரில் ஆகஸ்ட் 26 ஆம் தேதியும், சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 19 ஆம் தேதியும், ஈரோடு மாவட்டத்தில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியும் பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.