Movie prime

தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

 
rain leave
இன்று அக்டோபர் 16 ஆம் தேதி தொடர் கனமழை காரணமாக திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது.
rain
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 19 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் நேற்று மாலையில் சுமார் ஒரு ம‌ணி நேர‌த்திற்கும் மேலாக‌ கனமழை பெய்த‌து. இன்று அக்டோபர் 16 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டுள்ளார்.
rain
அதை தொடர்ந்து, கரூர் மாவட்டத்திலும் இன்று அக்டோபர் 16 ஆம் தேதி அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு அந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.