கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!
Updated: Sep 26, 2023, 08:35 IST

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவில் இருந்தே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, விசாரம், ரத்தினகிரி , காவேரிப்பாக்கம் ,சோளிங்கர் ,அரக்கோணம், கலவை போன்ற இடங்களில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.

தொடர் மழை காரணமாக, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.