Movie prime

இன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் இயங்கும்!! பள்ளிக்கல்வித்துறை!!

 
School leave
இன்று தமிழ்நாடு முழுவதும் கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளும் இயங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று ஜூலை 15 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கல்வி வளர்ச்சி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
kamarajar
அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் காமராஜரின் பிறந்த நாளான இன்று காமராஜர் திருவுருவப் படத்தை அலங்கரித்து கொண்டாட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்கள் காமராஜரின் அரும்பணிகள் குறித்து உணர்ந்திட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
students
அந்த வகையில், பேச்சு போட்டி, ஓவியம், கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்கி மாணவர்களை ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.