Movie prime

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை?? அமைச்சர் அறிவிப்பு!!

 
tomato
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ₹100 வரை விற்கப்படுவாதல், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பசுமைப் பண்ணை கடைகளில் தக்காளி விற்பனையை ₹60 க்கு தேனாம்பேட்டை பசுமை பண்ணையில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பெரிய கருப்பன்.
tomato
அப்போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், தக்காளியின் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். சென்னையில் 2 நகரும் கடைகள் மற்றும் 27 பண்ணை பசுமை கடைகள், கோவையில் 10 நுகர்வோர் கடைகளில் காய்கறிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

மேலும், திருச்சியில் ஒரு நகரும் கடை மற்றும் 13 நுகர்வோர் கடைகளிலும், மதுரையில் 4 கடைகளிலும் தூத்துக்குடி, திருவண்ணாமலை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தலா ஒரு கடை என்று தமிழ்நாடு முழுவதும் 65 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
tomato
அதுமட்டுமின்றி, தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தால், தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம், குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும், அவர் கூறினார்.