அதிர்ச்சி!! தமிழ்நாட்டில் மின்னல் தாக்கி +1 மாணவி பலி!!
Mar 24, 2023, 10:09 IST

நேற்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் பரவலாக கனமழை பெய்தது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பிளஸ் 1 மாணவி உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

தமிழக கடலோர பகுதியில் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த கனமழை மற்றும் இடி மின்னல் காரணமாக, தென்னை மரம் சாய்ந்து விழுந்ததில் முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த அண்டம் பள்ளம் கிராமத்தில் பயிர்களுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பிளஸ் 1 மாணவி வினோஷா, மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதனால் மக்களிடையே பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.