Movie prime

அதிர்ச்சி!! தடுப்பூசி போட்ட 10 மாத குழந்தை பலி!! கதறிய பெற்றோர்கள்!!

 
death
தஞ்சாவூர் மாவட்டம் மடிகை பகுதியில் வசித்து வருபவர்  சதீஷ்குமார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற 10 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் குழந்தைக்கு தடுப்பூசி போட  அங்கன்வாடி மையத்தில் இருந்து தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தனர். இதனால்  கீதா குழந்தையை தூக்கி கொண்டு துறையூர் அங்கன்வாடி மையத்தில் குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார்.  தடுப்பூசி போட்ட உடனே திடீரென   குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. சிறிது நேரத்தில்  குழந்தை சுயநினைவை இழந்து விட்டது.  
died baby
உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை  எடுத்து  சென்றனர். அங்கு பணியில் இருந்த   மருத்துவர்கள் குழந்தைக்கு மேலும் 4 ஊசியை செலுத்தினர். ஆனால் குழந்தையின் உடல்நிலை படு மோசமானது.  அங்கு பணிபுரியும் மருத்துவர் தனது காரிலேயே   குழந்தையையும், பெற்றோரையும் அழைத்து கொண்டு தஞ்சை அரசு ராசமிராசுதார் மருத்துவமனையில் இறக்கி விட்டார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள்   குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.குழந்தையை இறந்ததை கேட்ட தாய் வாயிலும் , வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுத காட்சி காண்பவர்களை கரைய வைத்தது. இது குறித்து குழந்தையின் தாய் கீதா” தடுப்பூசி போட்ட வேகத்தில் குழந்தையின் உடல்நிலை மோசமானது.  
baby death
உடனே  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றோம். அங்கேயும் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது. மருத்துவரின் காரிலேயே தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அரசு மருத்துவமனையில் எங்களை இறக்கிவிட்ட வேகத்தில் மருத்துவர்களை காணவில்லை.   உள்ளே போய் மருத்துவரை சந்தித்த போது குழந்தை இறந்துவிட்டதாக  தெரிவித்தனர். தடுப்பூசி போடப்பட்டதால் தான் குழந்தை இறந்ததாகவும், எனவே இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தையின் இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.