Movie prime

அதிர்ச்சி!! 13 வயது மல்யுத்த வீராங்கனை திடீர் தற்கொலை!!

 
thokku
பிரபல மல்யுத்த வீராங்கனை காவ்யா பூஜார் 13 வயதே ஆகும் நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹரிஹரா நகரில் ஷிபாரா சர்க்கிள் பகுதியில் காவ்யா பூஜார் வசித்து வருகிறார். 13 வயதாகும் இவர் கர்நாடகாவில் மல்யுத்த பயிற்சி விடுதியில் தங்கியிருந்து பயிற்சி பெற்று வந்துள்ளார்.
kavya
இந்நிலையில், சிறுமி காவ்யா பூஜார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறை தினங்களை ஒட்டி, தனது வீட்டுக்கு வந்திருந்த நிலையில், அறைக்குள் சென்ற அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, காவ்யா பூஜார் உடலை மீட்டுள்ளனர்.

பின்னர் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். ஆனால் தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவில்லை. இதையடுத்து தற்கொலை செய்த காவ்யா பூஜாரின் உடலை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஹரிஹரா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
hospital
தற்போது காவ்யா பூஜாரின் தற்கொலைக்கான காரணம் பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவ்யா பூஜாரின் குடும்பத்தினர் பிரபல மல்யுத்த வீரர்களாக இருந்து வரும் நிலையில், காவ்யாவின் மீதும், அந்த அழுத்தம் தரப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலைச் செய்து கொண்ட காவ்யா, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.