Movie prime

அதிர்ச்சி!! டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமி உயிரிழப்பு!!

 
death
திருப்பத்தூர் சிவராஜ் பேட்டை பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழைக்கால நோய்களும் பெரும்பாலான இடங்களில் பரவத் தொடங்கியுள்ளது.
fever
காய்ச்சல், சளி, இருமல் முதல் டெங்கு மலேரியா போன்ற பெரிய நோய்த் தொற்றுகள் வரை சில இடங்களில் பரவி வருகிறது. அதிலும், டெங்கு காய்ச்சல் பரவல் சற்று அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் சிவராஜ் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அபிநீதி என்ற 4 வயது சிறுமி.
dengue
இந்த சிறுமிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 4 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.