Movie prime

அதிர்ச்சி!! 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து பயங்கர விபத்து!! 13 பேர் பலி!!

 
egypt bulinding accident
எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் கடந்த திங்கட்கிழமை ஐந்து மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மீட்புப் படையினர் இடிபாடுகளுக்குள் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
egypt bulinding accident
எகிப்து நாட்டில் கட்டிடங்கள் இடிந்து விழுவது அடிக்கடி நிகழும் பொதுவான சம்பவம், இங்கு தரமற்ற கட்டுமானம் மற்றும் பராமரிப்பு இல்லாமை ஆகியவை குடிசை நகரங்கள், ஏழை நகர சுற்றுப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பரவலாக உள்ளன. அந்த வகையில், எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் சுற்றுப்புறமான ஹடேக் எல்-குப்பா நகரின் மையத்தில் இருந்து சுமார் 2 மைல் (3.2 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள கட்டிடங்கள் இடிந்து உள்ளன.
egypt bulinding accident
கெய்ரோவின் துணை ஆளுநர் ஹொசம் ஃபாவ்சி கூறுகையில், தரை தளத்தில் வசிப்பவர்களில் ஒருவர் முன்னர் மேற்கொண்ட பராமரிப்பு பணியின் போது பல சுவர்களை அகற்றியதால் இந்த இடிபாடு விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். காயமடைந்தவர்களுக்கு உதவி வழங்கப்பட்டு வருவதாகவும், அருகிலுள்ள இடங்களில் சேதம் ஏற்படுவதைக் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.