Movie prime

அதிர்ச்சி!! தெருவில் சென்ற 5 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்கள்!!

 
stray dogs
ஓசூரில் தெருவில் நடந்து சென்ற 5 வயது சிறுமியை தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் மாநகராட்சியில் உள்ள வாசவி நகரில் கார்த்திக் என்ற நபர் வசித்து வருகிறார். அவருக்கு தேஜாஸ்ரீ என்ற 5 வயது மகள் உள்ளார்.
stray dogs biting small girl
தேஜாஸ்ரீ சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தேர்வில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமியை 3 தெரு நாய்கள் சேர்ந்து சுற்றி வளைத்து கடுமையாக அடித்து குதறி உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம்பக்கத்தினர் காயமடைந்த சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.
hospital
இந்நிலையில், சிறுமியை நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அண்மை காலமாக ஓசூரில் தெரு நாய்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.