Movie prime

அதிர்ச்சி!! சுற்றுலா வேன் மீது லாரி மோதி 7 பெண்கள் பலி!! 7 பேர் படுகாயம்!!

 
accident
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டையில் இருந்து 2 வேன்களில் சுற்றுலா சென்றுவிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நாட்றம்பள்ளி சண்டியூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஒரு வேன் பழுதடைந்து விட்டது. அதன் காரணமாக அதை சாலையோரம் நிறுத்தி வைத்து விட்டு பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதே சாலையில் அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்த வேனின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
van accident
இதில் வேனின் பின்பகுதி அப்பளம் போல நொறுங்கிவிட்டது. இந்த கோர விபத்தில், வேனுக்குள் அமர்ந்திருந்த, வேனை விட்டு இறங்கி கீழே சாலையில் ஓரமாக அமர்ந்திருந்த பெண்கள் என 7 பேர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த திருப்பத்தூர் காவல்துறையினர்  விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 7 பேரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
death
சம்பவ இடத்தில் உயிரிழந்து கிடந்த ஏழு பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.இந்த விபத்துக்கு பிறகு லாரி ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் சுற்றுலா சென்றவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.