அதிர்ச்சி!! 13 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு மரணம்!!
Updated: Apr 2, 2023, 12:30 IST

தெலுங்கானா, மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள அப்பைபாலம் கிராமத்தில் லகபதி - வசந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்ரவந்தி என்ற 13 வயது மகள் உள்ளார். ஸ்ரவந்தி மரிபெடா தண்டாலில் உள்ள தனியார் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே போல் லகபதி - வசந்தி தம்பதியினருக்கு 10 ஆம் வகுப்பு படிக்கும் அன்னு என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஸ்ரவந்தி பள்ளி முடிந்து மாலை நேரத்தில் வீட்டின் அருகே தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மூச்சு விடுவதில் லேசாக சிரமம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, மறுநாள் அதிகாலை கடுமையாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், உடனடியாக தனது பாட்டியிடம் கூறியுள்ளார்.

சிறிது நேரத்திலேயே சிறுமி மயங்கி விழுந்ததால், அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி சிறுமியின் தந்தை லகபதிக்கு தகவலளித்துள்ளார். அவர் உடனடியாக தனது மகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.13 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.