Movie prime

அதிர்ச்சி!! கபடி விளையாடிய 16 சிறுவன் மயங்கி விழுந்து மரணம்!!

 
kabadi
இன்றைய காலத்தில் யாருக்கும் எந்த நேரத்திலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம். பல எதிர்பாராத சூழல்களில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. திருமண விழாவில் நடனம் ஆடிய நபர் திடீரென மயங்கி விழுந்து மரணமடைவது, உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் நபர் திடீரென மரணமடைவது போன்ற பல்வேறு சூழல்களில் பல்வேறு நபர்கள் திடீரென உயிரிழந்து வருகின்றனர்.
kabadi death
அந்த வகையில், 16 வயது சிறுவன் ஒருவன் கபடி விளையாடி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள செஞ்சை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்த திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டியில் காரைக்குடி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த பிரதாப்(16) என்பவர் விளையாடினார்.

தனது அணிக்காக பிரதாப் ரெய்டு சென்று மாற்று அணி  வீரர்களை பிடிக்க முயற்சி செய்த போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், அவரது தலை தரையில் மோதியதாக கூறப்படுகிறது. பிரதாப் எதிரணி வீரர்களிடம் சிக்கியதும் சுதாரித்துக் கொண்டு எழுந்து சென்று வெளியே அமர்ந்திருக்கும் போது சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
kabadi
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு  காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். பிரதாப்பின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும், இது குறித்து காரைக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.