அதிர்ச்சி!! கார் மோதி பயங்கர விபத்து!! 9 பேர் பலி!!
Jul 20, 2023, 09:23 IST

குஜராத் மாநிலம் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக விரைந்து வந்த கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1.15 மணி அளவில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

குஜராத் மாநிலம் சர்கேஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் இஸ்கான் கோவில் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு கார் சாலையில் உள்ள மேடு பள்ளத்தில் விபத்தில் சிக்கியது. இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் அந்த கார் அருகில் விரைந்து வந்து கூடியுள்ளனர். அப்போது, 160 கி.மீ. வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று அவர்கள் மீது மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் சாலையில் இருந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சொகுசு கார் விபத்து ஏற்பட்ட பின்னர் சாலையில் நிற்காமல் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த சொகுசு காரை ஓட்டி வந்தவர் சத்யா படேல் என்றும், இந்த விபத்தில் அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர்.