அதிர்ச்சி!! உலகை அச்சுறுத்தும் புதிய வைரஸ் பாதிப்பு!! 9 பேர் உயிரிழப்பு!!
Feb 14, 2023, 10:08 IST

தற்போது எபோலா வைரஸ் போன்ற மற்றொரு கொடிய வைரஸ் மத்திய ஆப்பிரிக்காவில் பரவி வருகிறது. மார்பர்க் என்ற இந்த புதிய வைரஸின் தாக்கத்தால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். வெளவால்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடிய இந்த புதிய வைரஸ் தான் மார்பர்க் வைரஸ்.

இந்த வைரஸ் தற்போது ஆப்பிரிக்காவில் வேகமாக பரவி வருகிறது. உலகம் இன்னும் கொரோனா வைரஸிடம் இருந்தே மீள முடியாமல் தவித்து வரும் நிலையில், தற்போது இந்த புதிய வைரஸின் தாக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த மார்பர்க் வைரஸ் என்பது எபோலா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ்.
எபோலா நோயின் அறிகுறிகளான காய்ச்சல், வாந்தி, இரத்தப்போக்கு, வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகளே இந்த மார்பர்க் வைரஸுக்கும் ஏற்படுகின்றன. ஆனால், மூக்கு மற்றும் பிறப்புறுப்புகளில் ரத்தம் வருதல் ஆகியவை இந்த வைரஸின் அதிக தீவிர அறிகுறிகளாக கூறப்படுகிறது.

இந்த வைரஸ் பாதிப்பு தற்போது சற்று அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வைரஸின் தாக்கத்தால் 9 பேர் உயிரிழந்துள்ளதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நோய் தொற்று ஏற்பட்ட நபரிடமிருந்து அருகில் இருப்பவர்களுக்கு எளிதில் பரவும் தன்மையை கொண்டது. மேலும், வௌவால் வசிக்கும் குகைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம் என்றும் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது.