Movie prime

அதிர்ச்சி!! அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்!! வீதியால் தஞ்சமடைந்த பொதுமக்கள்!!

 
earthquake
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை  4.4 ரிக்டர் அளவில்  திடீரென நில அதிர்வு ஏற்பட்டது.   இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உருவான சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கம் குறித்து ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே" ஜெய்ப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பிற இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.  
ritcher scale
அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அரை மணி நேர இடைவெளியில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அதிகாலை 4.09 மணிக்கு முதல் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து 2 வது   நிலநடுக்கம் 4.22 மணிக்கு நிலநடுக்கமும் அடுத்த மூன்று நிமிடங்களில் அதாவது 4.25 மணிக்கு 3வது நிலநடுக்கமும் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
earthquake
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால்   தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அலறி அடித்தபடி வீட்டை விட்டு ஓடி வந்தனர். அதன் பிறகு பொதுமக்கள் அனைவரும் விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்ததையும் காண முடிந்தது. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் மாநிலம் முழுவதும் மக்கள் பெரும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.