Movie prime

அதிர்ச்சி!! கோவிலில் ஏற்பட்ட பயங்கர விபத்து!! 7 பேர் பலி!!

 
suicide
இன்றைய காலத்தில் எப்போது எந்த வகையான ஆபத்து ஏற்படும் என்று யாராலும் கூற முடியாது. அதிலும், திடீரென எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் பயங்கர விபத்து பல உயிர்களை பறித்து செல்லும் சம்பவம் பல இடங்களில் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உள்ளனர்.
babuji maharaj temple
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள பாபுஜி மகாராஜ் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்நிலையில், நேற்று அந்த பகுதியில் திடீரென மழை பெய்த போது, கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அந்த கோவிலில் உள்ள கொட்டகையின் கீழ் மழைக்கு ஒதுங்கி உள்ளனர்.
tree fall
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கொட்டகையின் மீது 100 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் முறிந்து விழுந்துள்ளது. இதனால், ஏற்பட்ட பயங்கர விபத்தில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளார். மேலும், 37 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.